2015-07-14 16:12:00

200 கோடி ஆண்டுகளில் பூமி மீண்டும் தண்ணீர் உலகமாக மாறும்


ஜூலை,14,2015. இருநூறு கோடி ஆண்டுகளில், பூமி மீண்டும் தண்ணீர் உலகமாக மாறிவிடும் என ஆய்வாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த, இலண்டண் நேச்சர் ஜியோசைன்ஸ் ஆய்வாளர்கள்,  ஏறக்குறைய 250 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீரிலிருந்து நிலம் வெளிவரத் தொடங்கியது. கண்டங்களின் மேலோட்டின் தடிமன், அதன் அதிகபட்ச அளவான 40 கி.மீ. அளவை ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு எட்டியது என்று கூறினர்.

தற்போது கண்டங்களின் மேலோட்டின் தடிமன் குறைந்து வருகிறது. கண்டங்களின் மேலோடுகள் அரிப்படைந்து வருவதால், 200 கோடி ஆண்டுகளில்,  பூமி மீண்டும் நீரில் மூழ்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Bristol பல்கலைக்கழக புவியியல் ஆய்வாளரான Bruno Dhuime அவர்கள் தலைமையிலான குழு மேற்கொண்ட இந்த ஆய்வில், உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட 13 ஆயிரம் பாறைகள் ஆய்வுக்கென பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆதாரம் : தினமணி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.