2015-07-06 16:18:00

வளர்ச்சித்திட்ட இலக்குகளில் கூட்டுறவு கழகங்களின் பங்கு


ஜூலை,06,2015. அனைத்துலக சமுதாயம் உறுதியான வளர்ச்சித்திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதில் கூட்டுறவு கழகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

ஜூலை 4ம் தேதி சிறப்பிக்கப்பட்ட உலக கூட்டுறவு கழகங்களின் நாளுக்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் பான் கி மூன்.

பெரிய வர்த்தகம் முதல் சிறு தொழில் வரை கூட்டுறவுக் கழகங்கள் உலக அளவில் ஆற்றும் பணிகளைக் குறிப்பிட்ட அவர், இக்கழகங்கள் 10 கோடி வேலை வாய்ப்புக்களை வழங்குகின்றன என்றும் தெரிவித்தார்.

உலகளவில் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், 2008ம் ஆண்டில் மட்டும் உலகிலுள்ள 300 பெரிய கூட்டுறவு கழகங்கள் 1.1 டிரில்லியன் டாலர் பணம் ஈட்டின என்றும் கூறினார் பான் கி மூன்.

உலகில் ஏறக்குறைய 26 இலட்சம் கூட்டுறவு கழகங்கள், ஒரு கோடியே 26 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கியுள்ளன. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.