2015-07-03 15:08:00

சிரியாப் போரால் சிறார் தொழிலாளர் அதிகரிப்பு, ஐ.நா.


ஜூலை,03,2015. சிரியாவில் இடம்பெற்றுவரும் பேரழிவுப் போரால் சிறார்த் தொழிலாளர் அதிகரித்துவரும்வேளை, இத்தொழில்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மேலும் முயற்சிகள் தேவை என்று ஐ.நா. கூறியுள்ளது.

சிரியாவில் இடம்பெற்றுவரும் போரால், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தல், கனமான பளுத் தூக்குதல், நச்சுகலந்த வேதியப்பொருள்களைக் கையாள்தல் என, ஆபத்தான வேலைகளை நீண்ட மணி நேரங்கள் செய்யும் சிறாரின் எண்ணிக்கை அதிகரிப்பதாக, யூனிசெப் நிறுவனமும், Save the Children அமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

சிரியாவில் நான்கரை ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போரை நிறுத்துவதற்கு உலகம் தவறியுள்ளதன் பலனை, அந்நாட்டுச் சிறார் அனுபவிக்கின்றனர் என்று அவ்வறிக்கை கூறுகின்றது. இப்போரினால் ஐந்தில் நான்கு பேர் வறுமையில் வாழ்கின்றனர். 76 இலட்சம் பேர் நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்துள்ளனர். 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.