2015-07-02 15:59:00

அமெரிக்க ஐக்கிய நாடு, கியூபாவுக்கிடையே தூதரக உறவு


ஜூலை,02,2015. அமெரிக்க ஐக்கிய நாடும், கியூபாவும் 54 ஆண்டுகால காழ்ப்புணர்வைக் களைந்து தங்களின் தலைநகரங்களில் தூதரகங்களைத் திறப்பதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்றுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

இவ்விரு நாடுகளுக்கிடையே உறவுகளை எளிதாக்குவதில் இது முக்கியமான முயற்சி என்றும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இம்முயற்சி இவ்விரு நாடுகளின் மக்களுக்கு மிகுந்த பலன்களைக் கொண்டு வரும் என்றும் பான் கி மூன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

கடந்த ஜூலை 20ம் தேதி இவ்விரு நாடுகளுக்கும் இடையே முழு அரசியல் உறவு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகரங்களான வாஷிங்க்டனிலும், ஹவானாவிலும் தூதரகங்கள் திறக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையே இறுக்கமாக இருந்த உறவில் சுமுகத்தன்மையை ஏற்படுத்தி அதைப் புதுப்பிப்பதற்கான எண்ணத்தை, 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவ்விரு நாடுகளின் தலைவர்களும் வெளிப்படுத்தினர்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.