2015-07-01 17:22:00

HIV தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவதை ஒழித்துள்ள நாடு


ஜூலை,01,2015. HIV நோய்க் கிருமிகளும், மேகப்புண்ணும் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவதை ஒழிப்பதில் உலகில் வெற்றி கண்டுள்ள முதல் நாடு கியூபா என்று, WHO உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

HIV நோய்க் கிருமிகளையும், பாலியல் நடவடிக்கையில் பரவும் தொற்றுக் கிருமிகளையும் ஒழிப்பதற்கான நீண்ட கால நடவடிக்கையில் இந்த வெற்றி மிக முக்கியமானது என்றும், எய்ட்ஸ் நோய் தாக்காத தலைமுறையைக் கொண்டிருப்பதற்கான முயற்சியில் இது முக்கிய படிநிலை என்றும் WHO நிறுவனம் கூறியது.

இன்று உலகில் HIV நோய்க் கிருமிகளுடன் வாழும் ஏறக்குறைய 14 இலட்சம் பெண்கள் ஒவ்வோர் ஆண்டும் கர்ப்பம் தரிக்கின்றனர், இவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்படாவிட்டால் 15 முதல் 45 விழுக்காடு வரை இவர்கள் கரப்ப காலத்தில் நோய்க் கிருமிகளைக் குழந்தைகளுக்குப் பரப்பக்கூடும் என்றும் WHO நிறுவனம் கூறியது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.