2015-06-30 16:37:00

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு வாழ்த்து


ஜூன்,30,2015. இச்செவ்வாயன்று ஏறக்குறைய இரு வார கோடை விடுமுறைக்கு காஸ்தெல் கந்தோல்ஃபோவிற்குச் சென்ற முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை நேரில் சந்தித்து தனது நல்வாழ்த்தைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், வத்திக்கானில் தங்கியிருக்கும் Mater Ecclesiae முன்னாள் துறவு இல்லத்திற்கு இச்செவ்வாய் காலையில் சென்று ஏறக்குறைய அரைமணி நேரம் செலவிட்டு, இந்த ஓய்வு இனிதாக அமைய வேண்டுமென வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஜூலை 14ம் தேதி வத்திக்கான் திரும்புவார் என திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.