2015-06-20 17:24:00

திருத்தந்தையின் இச்சனிக்கிழமை காலை சந்திப்புகள்


ஜுன்,20,2015. Equatorial Guinea நாட்டின், திருப்பீடத்திற்கான புதிய தூதுவர் Joaquin Mbana Nchama  அவர்கள், இச்சனிக்கிழமை காலை தன் நம்பிக்கைச் சான்றிதழை திருத்தந்தையிடம் சமர்ப்பித்து தன் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

Equatorial Guinea, கேமரூன், இஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் கல்வி பயின்றுள்ள புதிய தூதுவர் Mbana Nchama, மெய்யியலில் உயர் கல்வி பட்டமும், மனித குலம் சார்ந்த ஆய்வுப் படிப்பில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

திருப்பீடத்திற்கான புதிய தூதுவர் Mbana Nchamaவைச்  சந்தித்த இதே நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்களுக்கான திருப்பீட பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Quellet, ACRI என்ற நிதி அமைப்பின் தலைவர் Giuseppe Guzzetti ஆகியோரையும் சந்தித்து உரையாடினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.