2015-06-18 15:12:00

கடுகு சிறுத்தாலும் – எல்லா நேரத்திலும் விழிப்பாயிருங்கள்


முல்லா ஒரு மாலை நேரத்தில் தன் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று அவருடன் நேரம் போனது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார். இருட்டாகி விட்டது. மெழுகுவர்த்தியை வைத்த இடம் தெரியாமல் தேடிக்கொண்டிருந்தார் நண்பர். இருட்டில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார் அவர். என்ன சமாச்சாரம் என்று கேட்டார் முல்லா. மெழுகுவர்த்தியை எங்கோ வைத்து விட்டேன், இருட்டில் உட்கார்ந்தா நாம் பேசிக் கொண்டிருப்பது? என்று நண்பர் வருத்தத்தோடு கூறினார். இதற்காகவா, கவலைப்படுகிறீர்கள், நமது பேச்சுஒலி இருட்டில்கூட நம் இருவர் காதுகளில் விழும் என்பதை மறந்து விட்டீரா? என்றார் முல்லா. முல்லாவின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற சாதுரியமான நகைச்சுவையை அனுபவித்து இரசித்த நண்பர் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டார். இறைவா, இருள்கூட உமக்கு இருட்டாயில்லை, இரவும் உமக்கு பகல்போல் ஒளியாய் இருக்கின்றது என்றார் திருப்பாடல் ஆசிரியர். இறைவன் கண்களிலிருந்து யார் தப்ப முடியும்? இரவோ பகலோ எல்லா நேரங்களிலும் விழிப்புடன் நடந்துகொள்வோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.