2015-06-12 16:23:00

காலநிலை மாற்றம் வருங்கால வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தல்


ஜூன்,12,2015. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்குச் சரியான கொள்கைகள் வகுக்கப்பட்டால் ஆறு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று உலக தொழில் நிறுவனம் கூறியுள்ளது.

ஜெனீவாவிலுள்ள ILO உலக தொழில் நிறுவனத்தின் தலைமையிடத்தில், உலக தொழில் நிறுவனத்தின் மாநாட்டை இவ்வியாழனன்று தொடங்கி வைத்து உரையாற்றிய அந்நிறுவனத் தலைவர் Guy Ryder அவர்கள், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம் என்று கூறினார்.

காலநிலை மாற்றத்தை தற்போது கட்டுப்படுத்தாமல் இருப்பது, வருங்காலத் தொழில் உலகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்த Ryder அவர்கள், வறட்சியின் பாதிப்பை சில நாடுகள் தொடர்ந்து அனுபவித்து வருகின்றன என்று சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.