2015-06-05 15:40:00

2016ல் திருத்துதூதுப் பயணம் பற்றி அரசுத்தலைவர் Bachelet


ஜூன்,05,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிலே அரசுத்தலைவர் Michelle Bachelet Jeria அவர்கள், 2016ம் ஆண்டில் சிலே நாட்டுக்குத் திருத்தந்தை திருத்துதூதுப் பயணம் மேற்கொள்வது பற்றிக் கலந்து பேசியதாகத் தெரிவித்தார்.

சிலே நாட்டுக்கான திருத்தந்தையின் திருத்துதூதுப் பயணம் பற்றிய தேதி இன்னும் குறிக்கப்படவில்லை என்றும், இப்பயணம் 2016ம் ஆண்டில் இடம்பெறும் என்றும் கூறினார் சிலே அரசுத்தலைவர் Bachelet.

2016ம் ஆண்டில் இலத்தீன் அமெரிக்காவில் திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்துதூதுப் பயணம் பற்றித் தான் கலந்து பேசியதாகவும், சிலே நாட்டுத் திருத்துதூதுப் பயணத்தின்போது Argentina,  Uruguay ஆகிய நாடுகளுக்கும் திருத்தந்தை செல்வார் எனவும் Bachelet அவர்கள் கூறினார்.

அரசியல் மற்றும் நன்னெறி வாழ்வு முறைகள் சிறந்து விளங்கினால் ஒரு நீதியான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பது வலியுறுத்தப்பட்டதாக சிலே அரசுத்தலைவர் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.