2015-06-04 15:30:00

கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய அபராத தொகை : அதிரடி தீர்ப்பு


ஜூன்,04,2015 புகைப்பிடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 12.4 பில்லியன், அதாவது, 1240 கோடி டாலர்களை இழப்பீடாக புகையிலை நிறுவனங்கள் கொடுக்க வேண்டும் என கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புகைப்பிடிப்பதால் வரும் உடல்நலக் கேடுகள் பற்றி கியூபெக் மாநிலத்தில், 1998-ம் ஆண்டு, விளம்பர வாசகம் மூலம் தனது தயாரிப்புகளில் சொல்லாத நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது.

கியூபெக் பகுதியில் சிகரெட் பிடிப்பதால் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயால், பாதிக்கப்பட்டுள்ளனர் என புகார் கூறப்பட்டிருந்தது.

பல ஆண்டுகளுக்கு பிறகு, அண்மையில் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், 1240 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Imperial Tobacco Canada, Rothmans Benson & Hedges, JTI-MacDonald  ஆகிய சிகரெட் நிறுவனங்கள் மீது இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பினை ஏற்காத புகையிலை நிறுவனங்கள், மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளன.

கனடா நாட்டு வரலாற்றிலேயே ஒரு வழக்கில் இந்த அளவுக்கு பெரிய அபராத தொகை தண்டனையாக விதிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : BBC/TamilWin / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.