2015-06-04 15:45:00

அமைதி தீபத்தை ஏந்தி வந்த இளையோருக்கு திருத்தந்தை ஆசீர்


ஜூன்,04,2015 நிரந்தர நகரான உரோமைக்கு வருகை தந்துள்ள இளையோரை தான் வாழ்த்துவதாகவும், அமைதி, சமுதாய ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வளர்க்க இளையோர் இன்னும் ஆர்வமாக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஜூன் 3, இப்புதனன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் தன் மறைகல்வி உரையை வழங்கியபின், Macerata-Loreto பகுதியிலிருந்து அமைதி தீபத்தை ஏந்தி வந்திருந்த இளையோருக்கு ஆசீர் வழங்கியபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

Marche, Veneto, Lombardy மற்றும் Puglia, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் வத்திக்கானுக்கு சுமந்துவந்த அமைதி தீபம், ஜூன் 6, இச்சனிக்கிழமையன்று Maceretaவில் அமைந்துள்ள Helvia Recina விளையாட்டுத் திடலில் நடைபெறும் திருப்பலிக்கு முன், அங்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி வேண்டி, விளையாட்டு வீர்கள் மேற்கொள்ளும் இந்த தீப ஓட்டம், இத்தாலிய விளையாட்டு மையமும், இரண்டாம் யோவான் பவுல் மையமும் இணைந்து நடத்தும் ஒரு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.