2015-06-02 15:46:00

இணையதள குற்றங்களிலிருந்து அணு உலகத்தைப் பாதுகாக்க நடவடிக்கை


ஜூன்,02,2015. இணையதளம் சார்ந்த குற்றங்கள் உலகில் அதிகரித்துவரும் இவ்வேளையில், உலகை அணு அச்சுறுத்தலின்றி பாதுகாப்பதற்கு அனைத்துலக சமுதாயம் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.

ஆஸ்ட்ரியாவின் வியன்னாவிலுள்ள அனைத்துலக அணு சக்தி நிறுவனம், இணையதளம் சார்ந்த குற்றங்கள் குறித்து முதல்முறையாக நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கில் இவ்வாறு கேட்டுக்கொண்டார் அந்நிறுவனத் தலைவர் Yukiya Amano.

இணையதளம் சார்ந்த குற்றங்களும், தாக்குதல்களும் அண்மை ஆண்டுகளில், உலகில், குறிப்பாக, வளரும் நாடுகளில் அதிகரித்து வருகின்றன என்றும், அணு உலகமும் இந்த இணையதளக் குற்றங்களால் பாதிக்கப்படும் ஆபத்தை எதிர் நோக்குகின்றது என்றும் எச்சரித்தார் Amano.

“அணு உலகில் கணனி பாதுகாப்பு” என்ற தலைப்பில் இத்திங்களன்று தொடங்கிய இக்கருத்தரங்கில் 92 உறுப்பு நாடுகளின் 650க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.