2015-05-30 16:04:00

ஆசியாவில் பொதுநிலை மறைப்பணியாளர்களின் முதல் மாநாடு


மே,30,2015. “ஆசியாவில் திருஅவை : மனமாற்றத்திலிருந்து நற்செய்தி அறிவிப்பு” என்ற தலைப்பில், ஆசியாவிலுள்ள பொதுநிலை மறைப்பணியாளர்களுக்கென முதன்முறையாக மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஹாங்காக் பொதுநிலையினர் கத்தோலிக்க கழகம் ஆரம்பிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்கத்தோலிக்க கழகம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது.

இவ்வாரத்தில் நடைபெற்ற இந்த நான்கு நாள் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றிய ஹாங்காக் கர்தினால் ஜான் டாங் அவர்கள், சமுதாயத்தில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கென மறைபோதகர்கள் தங்களின் விசுவாசத்தையும், குழுப் பண்பையும் ஆழப்படுத்தி பிறரன்புப் பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

நற்செய்தி அறிவிப்புப் பணியில் பொதுநிலையினரின் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார் கர்தினால் ஜான் டாங்.

பல ஆசிய நாடுகளிலிருந்தும், பிற கண்டங்களிலிருந்தும் ஏறக்குறைய ஐம்பது பிரதிநிதிகள், இந்த மாநாட்டில் கலந்துகொண்டு, இத்தகைய மாநாடு மீண்டும் நடத்தப்படுமாறு கேட்டுக்கொண்டதாக ஃபீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.