2015-05-28 16:18:00

சீனாவில் கத்தோலிக்கத் தலைவர்கள் கைது


மே,28,2015. சீனாவில் திருத்தந்தைக்கு விசுவாசமாக வாழும் கத்தோலிக்கரை ஒடுக்குவதன் ஒரு கட்டமாக, அந்நாட்டின் ஹெபெய் மாநிலத்தில் ஓர் ஆயரும், ஓர் அருள்பணியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்மாதம் 12ம் தேதி Zhengding ஆயர் Julius Jia Zhiguo அவர்களைக் கைது செய்த அதிகாரிகள், இம்மாதம் 24ம் தேதி ஞாயிறன்று தூய ஆவியார் பெருவிழா திருப்பலி நிறைவேற்றுவதற்கு ஆயரைத் திருப்பி அனுப்பியுள்ளனர் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயர் கைது செய்யப்பட்டதற்கு காரணம் தெரியவில்லை என்றும், Anzhuang நகரிலுள்ள செப மையத்தின் பீடத்தையும் அதிகாரிகள் அழித்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

இதற்கிடையே, சீனாவில் வாழும் அனைத்து மதங்களின் தலைவர்களும் தங்களைப் பற்றிய விபரங்களை அறிவிக்குமாறு சீன அரசு அண்மையில் ஆணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.