2015-05-27 16:12:00

ஆர்ஜென்ட்டீனாவின் விடுதலை நாளையொட்டி ஆயர்கள் செய்தி


மே,27,2015 எதிரி, பகைவர் என்ற எண்ணங்களை நிராகரித்து, பிரிவுகளைக் களைந்து, சண்டைகளையும், வெறுப்பையும் விடுத்து நாட்டை ஒன்றிணைக்கவேண்டும் என்று ஆர்ஜென்ட்டீனா நாட்டின் ஆயர்கள் கூறியுள்ளனர்.

மே மாதப் புரட்சியின் விளைவாக, ஆர்ஜென்ட்டீனா நாட்டின் விடுதலை நாள், மே 25, இத்திங்களன்று கொண்டாடப்பட்டதையடுத்து, புவெனோஸ் அயிரேஸ் பேராயர், கர்தினால் மாரியோ அவுரேலியோ போலி (Mario Aurelio Poli) அவர்களும், லுவான் (Lujan) உயர்மறைமாவட்டப் பேராயர் அகஸ்டின் ரொபெர்த்தோ ராத்ரிசானி (Agustín Roberto Radrizzani) அவர்களும் வெளியிட்ட கருத்துக்கள் இவ்விதம் ஒருமைப்பட்டிருந்ததென்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆர்ஜென்டீனா நாட்டின் அரசுத் தலைவர் Cristina Kirchner அவர்கள், லுவான் பேராலயத்திலும், எதிர்கட்சித் தலைவர் Mauricio Macri அவர்கள்,  புவெனோஸ் அயிரேஸ் பேராலயத்திலும்  கலந்துகொண்ட சிறப்பு வழிபாடுகளில், பேராயர்கள் இருவரும் நாட்டின் ஒற்றுமை குறித்து கருத்துக்களை .வெளியிட்டனர்.

தேர்தலைச் சந்திக்கும் இவ்வாண்டில், அரசியல் தலைவர்கள், ஆர்ஜென்ட்டீனா நாட்டை, கண்ணியத்தோடு தங்கள் தோள்களில் சுமக்கவேண்டும் என்று கர்தினால் போலி அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.