2015-05-19 16:16:00

உலகில் 110 கோடிப் பேருக்கு மின்சார வசதி இல்லை


மே,19,2015. 2030ம் ஆண்டுக்குள் உலகில் அனைத்து மக்களும் தங்கள் வாழ்வுக்குத் தேவையான மின்சக்தியைப் பெற வேண்டுமெனில் சுழற்சி முறையில் புதுப்பிக்கப்படும் மின்சக்தி வசதிகளை மேம்படுத்துவதில் உலகம் வேகமாகச் செயல்படுமாறு ஐ.நா. ஆதரவுடன் வெளியாகியுள்ள ஓர் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த உலகம் அனைவருக்கும் வாழ்வளிக்கும் மின்சக்தியை மேம்படுத்துவதில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்றுரைக்கும் அவ்வறிக்கை, தற்போது உலகில் ஏறக்குறைய 110 கோடிப் பேர் மின்சாரம் இன்றி வாழ்கின்றனர் என்றும் கூறியது.

மேலும் உலகில் ஏறக்குறைய 300 கோடிப் பேர், மண்ணெண்ணெய், விறகு, அடுப்புக்கரி, சாணம் போன்ற மாசுக்கேட்டை அதிகரிக்கும் எரிபொருள்களை இன்றும் சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர் என்று கூறும் அவ்வறிக்கை, சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் மின்சக்தியை மேம்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளது.

வருகிற டிசம்பரில் பாரிசில் நடைபெறும் காலநிலை மாற்றம் குறித்த உலக மாநாட்டுக்குத் தயாரிப்பாக நியுயார்க்கில் இத்திங்களன்று தொடங்கியுள்ள, புதுப்பிக்கப்படும் மின்சக்தி குறித்த கருத்தரங்கு வருகிற வியாழனன்று நிறைவடையும். 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.