2015-05-19 16:10:00

ஆயுதக் களைவு இன்றி அணு ஆயுதங்கள் அமைதிக்கு அச்சுறுத்தல்


மே,19,2015. உலகில் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்படவும், அணு ஆயுதங்கள் புழக்கத்தில் இருப்பது தடை செய்யப்படவும் வேண்டுமென்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பனிப்போர் முடிவடைந்ததோடு அணு ஆயுதங்களின் அச்சுறுத்தலும் முடிந்துவிட்டது என்று அமெரிக்கர்களில் பலர் கருதுகின்றனர், ஆனால், இது உண்மையல்ல என்று, கடந்த வாரத்தில் அமெரிக்க அரசுச் செயலர் ஜான் கெர்ரி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அந்நாட்டின் நீதி மற்றும் அமைதி ஆணைக் குழு தலைவர் ஆயர் Oscar Cantu.

அணு ஆயுதப் பரவலும், ஏன், அணுப் பயங்கரவாதமும் ஆபத்துக்களை முன்வைக்கும் இன்றைய உலகில், அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட்டு, அணுப் பொருள்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படவும் வலியுறுத்தியுள்ளார் Las Cruces ஆயர் Cantu.

நியுயார்க் நகரிலுள்ள ஐ.நா. நிறுவனத் தலைமையகத்தில் அணு ஆயுதப் பரவலைத் தடைசெய்யும் கருத்தரங்கு நடைபெறுவதையொட்டி இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளார் ஆயர் Cantu. இந்த ஐ.நா. கருத்தரங்கு வருகிற வெள்ளிக்கிழமை நிறைவடையும்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.