2015-05-18 16:28:00

இந்தியாவில், புற்றுநோயால் தினமும், 1,300 பேர் உயிரிழப்பு


மே,18,2015. இந்தியாவில் புற்றுநோயால் இறப்போர் விகிதம், 2012 - 2014ம் ஆண்டுகளில், 6 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், கடந்த 2014ம் ஆண்டில், ஐந்து லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர் எனவும்  தேசிய புற்றுநோய் பதிவாளர் அலுவலகப் புள்ளிவிவரம் கூறுகிறது.

வயது மூப்பு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகையிலை மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவது, சுகாதாரமற்ற உணவுகளை உண்பது, போதுமான ஆய்வுக் கூடங்கள் இல்லாதது போன்றவற்றால், புற்றுநோயால் இறப்போர் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகக் கூறும் இந்த அலுவலகம், புற்றுநோய்க்கு சிறப்பு ஆலோசனை மையங்களை, நாடு முழுவதும் ஏற்படுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது எனவும் தெரிவிக்கிறது.

புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, இந்தியாவில் காசநோயால் அதிகமானோர் இறக்கின்றனர்.

ஆதாரம் : Dinamalar/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.