2015-05-16 16:14:00

மே 17 : நான்கு அருளாளருக்குப் புனிதர் பட்டம்


மே,16,2015. Jeanne Emilie de Villeneuve, Maria Alfonsina Danil Ghattas, Mary of Jesus Crucified,  Maria Cristina of the Immaculate Conception ஆகிய நான்கு பெண் அருளாளர்களை இஞ்ஞாயிறன்று புனிதர்களாக அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு காலை வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியில் இந்நால்வரும் புனிதர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நால்வரும் அருள்சகோதரிகள். ப்ரெஞ்ச் நாட்டவரான அருளாளர் Jeanne Emilie de Villeneuve அவர்கள், அமலமரி சகோதரிகள் சபையைத் தோற்றுவித்தவர். ஏழைச் சிறாரின் கல்விக்காக உழைத்த இவர், நோயாளிகள் பராமரிப்பில் ஆர்வம் காட்டியவர் மற்றும் மறைப்பணித்தளங்களில் கல்வியை ஊக்குவித்தவர்.

இத்தாலிய அருளாளர் Maria Cristina அவர்கள், திருநற்கருணையில் இயேசுவின் சகோதரிகள் சபையை ஆரம்பித்தவர். இவரும் கல்வியை ஊக்குவித்தவர்.

பாலஸ்தீன அருளாளர் Maria Alfonsina Danil Ghattas அவர்கள், எருசலேம் செபமாலை அன்னை தொமினிக்கன் சகோதரிகள் சபையைத் தோற்றுவித்தவர்.

காலணி அணியாத கார்மல் அடைபட்ட சபையின் உறுப்பினராகிய அருள்சகோதரி Mary of Jesus Crucified அவர்கள், ஒரு தியானயோகி மற்றும் இறைக் காட்சிகள் கண்டவர்.

இவ்விருவரும் புனித பூமியில் பிறந்து வளர்ந்து இறைவனடி எய்தியவர்கள். இந்தப் புனிதர் பட்டமளிப்பு விழாவில், பாலஸ்தீனத் தலைவர் Mahmūd Abbās அவர்களும் கலந்துகொள்வார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.