2015-05-16 16:21:00

பாலஸ்தீன அருளாளர்கள் மகளிர் வளர்ச்சிக்கு உழைத்தவர்கள்


மே,16,2015. இஞ்ஞாயிறன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவிருக்கும் இரு பாலஸ்தீன அருளாளர்கள் பற்றி செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள், இரு பாலஸ்தீன அருள்சகோதரிகளின் புனிதர் பட்டமளிப்பு நிகழ்வு துன்பங்களை அனுபவித்துவரும் புனித பூமி குடிமக்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் நிறைந்ததாக உள்ளது என்று கூறினார்.  

இக்கூட்டத்தில் பேசிய ஜோர்டன் அருள்பணியாளர் Rifat Bader அவர்கள், இவ்விரு தூயவர்களும் அரபு உலகில் பெண்கள் முன்னேற்றம் அடையக் கருவிகளாகச் செயல்பட்டவர்கள் என்று கூறினார்.

இவ்விரு அருளாளர்களும், அரபு உலகில் அமைதிக்கான உரையாடலை ஊக்குவித்தவர்கள் என்றும் உரைத்த அருள்பணியாளர் Bader அவர்கள், இந்த மாபெரும் நிகழ்வு, புனித பூமியில் திருத்தூதர்கள் காலத்துக்குப் பின்னர் முதல் முறையாக நடைபெறுகின்றது என்றும் தெரிவித்தார்.

புனித பூமிக் கிறிஸ்தவர்களுக்கு, குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும், தங்களின் சொந்த வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ள மக்களுக்கும், அடக்குமுறைத் துன்பங்களை எதிர்நோக்கும் எல்லாருக்கும் இந்நிகழ்வு ஒருமைப்பாட்டுச் செய்தியையும், ஊக்கத்தையும் தருகின்றது என்றும் கூறினார் அருள்பணியாளர் Bader.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.