2015-05-15 16:26:00

ஆந்திர கிராமங்களைத் தத்தெடுக்கும் அமெரிக்க இந்தியர்கள்


மே,15,2015.

மே,15,2015. ஆந்திராவில் பின்தங்கிய 2,400 கிராமங்களைத் தத்தெடுத்து, அவற்றை மேம்படுத்தும் திட்டங்களை நடத்த அமெரிக்க வாழ் இந்தியர்களில் பலர் முடிவெடுத்துள்ளனர்.

அமெரிக்க நகரங்களான லாஸ் ஏஞ்சலஸ், சான்ஹோஸே, சிகாகோ, நியூயார்க், நியூஜெர்சி, வாஷிங்டன், போர்ட்லண்ட், டல்லஸ் ஆகிய நகரங்களில் உள்ள இந்தியர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது ஆந்திராவில் உள்ள கிராமங்களை மேம்படுத்த அங்கு முதலீடு செய்ய வலியுறுத்தினார். இதன் அடிப்படையில், 'ஸ்மார்ட் வில்லேஜ் - ஸ்மார்ட் வார்ட்' என்ற திட்டத்தின் மூலம் அமெரிக்க வாழ் இந்தியர்கள், ஆந்திர மாநிலத்தில் உள்ள பின்தங்கிய 2,417 கிராமங்களைத் தத்தெடுக்க முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதல்முறையாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கிராமங்களைத் தத்தெடுக்கும் முயற்சிக்கு இந்தத் திட்டம் முன்னோட்டமாக கருதப்படுகிறது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.