2015-05-13 16:05:00

உரோம் நகரில் பணியாற்றும் துறவியர் திருத்தந்தையுடன் சந்திப்பு


மே,13,2015. நடைபெற்றுவரும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு உலக ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, உரோம் நகரில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோரை, மே 16, வருகிற சனிக்கிழமையன்று  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் சந்திப்பார் என்று உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

சனிக்கிழமை காலை 11 மணியளவில், முத்திப்பேறு பெற்ற ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெறும் உரோம் நகரில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோரை, மே 16, வருகிற சனிக்கிழமையன்று  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் சந்திப்பார்.இந்தச் சந்திப்பு இருபகுதிகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதியில், உலகின் பல நாடுகளிலிருந்தும், உரோம் நகர் வந்து பயிலும், அல்லது பணியாற்றும் துறவியர் தங்கள் வாழ்வு குறித்து சாட்சியங்கள் வழங்குவர் என்றும், முதல் பகுதியில் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பகுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரங்கத்தில் கூடியிருப்போரைச் சந்தித்து, அவர்களில் சிலர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உரோம் நகரில் வாழும் அர்ப்பணிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,000த்திற்கும் அதிகம் என்றும், இவர்களில் பலர், சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோருடன் பணிகள் செய்து வருகின்றனர் என்றும் உரோம் மறைமாவட்ட செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.