2015-05-12 16:21:00

நிலத்தடி நீரை உறிஞ்சுவதே நிலநடுக்கத்துக்கு காரணம்


மே,12,2015. நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்படுவதும், பூமிக்கடியில் உள்ள பாறையை முறையற்ற வகையில் வெட்டி எடுப்பதும், நிலநடுக்கம் ஏற்பட காரணமாகிறது என, காரைக்குடி, அழகப்பா அரசு கலை கல்லூரி, புவி அமைப்பியல் பேராசிரியர் உதயகணேஷ் அவர்கள் கூறினார்.

பூமியின் நிலப்பரப்பிலும், நீரின் அடியிலும் உள்ள புவி தட்டுகளின் நகர்தலே நில நடுக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற பேராசிரியர் உதயகணேஷ் அவர்கள்,  நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்படுவதாலும், பூமிக்கடியில் உள்ள பாறைகள் அதிக அளவில் வெட்டி எடுக்கப்படுவதாலும் ஏற்படும்  வெற்றிடத்தை நோக்கி புவித்தட்டுகள் நகர்வதால், இது, நில நடுக்கத்துக்கு காரணமாக அமைகிறது என்றார்.

ஜப்பானில் நிலநடுக்கத்தைத் தாங்கும் வீடுகள் கட்டப்படுவதுபோல், இந்தியாவிலும், அத்தகைய வீடுகளை கட்ட முயற்சி செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் உதயகணேஷ் அவர்கள் கூறினார். 

ஆதாரம் : Dinamalar/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.