2015-05-12 16:28:00

ஆண்டுக்கு 4 கோடி இறப்புகள் பதியப்படுவதில்லை - ஆய்வு


மே,12,2015. உலகில் நடக்கும் இறப்புகளில் மூன்றில் இரண்டு இறப்புகள், அதாவது ஆண்டொன்றுக்கு சுமார் 4 கோடி இறப்புகள், பதிவு செய்யப்படாமேலேயே போகின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

இதே போல மூன்றில் ஒரு பங்கு பிறப்புகளும் பதிவு செய்யப்படாமல் போகின்றன என்று லேன்செட் (Lancet) என்ற மருத்துவ இதழ் வெளியிட்ட‌ ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

இது போன்ற புள்ளிவிவரங்கள் பெறப்படுவதில் முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்று கோரியுள்ள ஆய்வாளர்கள், அப்போதுதான், திட்டங்களை உருவாக்குவோர், இன்னும் சற்று தெளிவான மேம்பட்ட முடிவுகளை எடுக்க உதவும் என்று கூறினர். 

ஆதாரம் : BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.