2015-05-08 15:53:00

பாலஸ்தீன புதிய புனிதர்கள் அமைதியின் பாலங்கள்


மே,08,2015. இம்மாதம் 17ம் தேதி வத்திக்கானில் புனிதர்களாக அறிவிக்கப்படவிருக்கும் இரு பாலஸ்தீன அருளாளர்கள் புனித பூமியில் மதங்கள் மத்தியில் அமைதியை ஏற்படுத்தும் பாலங்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் புனித பூமி கிறிஸ்தவத் தலைவர்கள்.

இந்த இரு பாலஸ்தீன அருளாளர்கள் குறித்து பாலஸ்தீனர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும் யூதர்களுமே மகிழ்ச்சியடையவார்கள், ஏனெனில் இந்த அருளாளர்கள், உயரிய மனித ஏற்புடைமை, மெய்ஞானம், இறைவன் பற்றிய ஆழ்நிலை அனுபவம் போன்றவற்றைப் பெற்றவர்கள் என்று, எருசலேம் துணை ஆயர் வில்லியம் ஷோமாலி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வத்திக்கானில் இம்மாதம் 17ம் தேதி நடைபெறும் புனிதர் பட்டமளிப்பு நிகழ்வில், பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas அவர்களும் கலந்துகொள்வார்கள் என அறிவித்த   ஆயர் ஷோமாலி அவர்கள், இவ்விரு அருளாளர்களின் பெயர்கள் மேரி மற்றும் மிரியம் என்றிருப்பதால், இப்பெயர்கள் முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மூன்று மதத்தினருக்குமே பொதுவானது என்றும் தெரிவித்தார்.

Mariam Baouardy, Marie-Alphonsine ஆகிய இரு பாலஸ்தீன அருளாளர்கள் இம்மாதம் 17ம் தேதி புனிதர்களாக அறிவிக்கப்படவுள்ளனர்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.