2015-05-08 15:44:00

சிறார்ப் பாதுகாப்புப் பணிக்குழு விதிமுறைகள் அறிவிப்பு


மே,08,2015. சிறாரைப் பாதுகாக்கும் திருப்பீட பணிக்குழுவுக்குரிய விதிமுறைகள் இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஒப்புதல் தெரிவித்த இந்த விதிமுறைகள் மூன்று ஆண்டுகளுக்கு பரிசோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த விதிமுறைகளை வெளியிட்டுள்ள திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பணிக்குழு பாஸ்டன் பேராயர் கர்தினால் Seán O’Malley அவர்கள் தலைமையில் இயங்கும் என்று சொல்லி அதன் விதிமுறைகளை விளக்கியுள்ளார்.

இக்குழுவின் தன்மை, அதன் பணிகள் போன்றவற்றை விளக்கும் இவ்விதிமுறைகள், இக்குழுவின் பணிகள் அடங்கிய ஏடுகள் வத்திக்கானில் வைக்கப்படும், இதன் சட்டமுறையான மையம் வத்திக்கானில் இயங்கும், இக்குழுவின் பணிகள் இத்தாலியம், இஸ்பானியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெறும் எனக் கூறியுள்ளது.

அனைத்துச் சிறார் மற்றும் நலிந்த வயதுவந்தோர் பாதுகாப்பில் தலத் திருஅவைகளின் பொறுப்புணர்வு இவ்விதிமுறைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.