2015-05-07 14:48:00

கடுகு சிறுத்தாலும் – மனத்தில் விழுந்த முடிச்சுகளை அவிழ்க்க..


புத்தர் ஒரு முறை தமது மேலாடையில் நிறைய முடிச்சுக்களைப் போட்டுக்கொண்டே போனார். முடிவில் அவரது மேலாடையே முடிச்சுக்களின் துணி மூட்டையாகி விட்டது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த சீடர்களிடம், இந்த மேலாடையை முன்புபோல் எப்படி ஆக்குவது என்று புத்தர் கேட்டார். பதில் தெரியாமல் திணறினார்கள் சீடர்கள். அப்போது புத்தர், நான் கடைசியாகப் போட்ட முடிச்சை முதலில் அவிழ்க்க வேண்டும் என்று கூறிக்கொண்டே, வரிசையாக அத்தனை முடிச்சுக்களையும் அவிழ்த்து மறுபடியும் அதனை மேலாடையாக்கினார். பின்னர் தம் சீடர்களிடம், நான் போட்ட முடிச்சுக்களை நானே அவிழ்ப்பது வெகு எளிது. ஏனென்றால் எதற்கடுத்து எது போடப்பட்டது என்பது எனக்குத் தெரியும். இதேபோல் உங்கள் மனதில் விழுந்த முடிச்சுகளை நீங்களே அவிழ்ப்பது சுலபம். பிறர் பிரித்துத் தரவேண்டும் என எதிர்பார்ப்பது பலவீனம் என்றார். நம் துன்பங்களை சோதிடர்களோ, குறி சொல்பவர்களோ, தாயத்து தகடுகளோ தீர்க்காது. ஆனால் அவரவர் பிரச்சனையை அவரவர்தான் தீர்க்க வேண்டும், அதுதான் எளிதும்கூட.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.