2015-05-05 16:04:00

இரத்தப் பரிசோதனையிலேயே கர்ப்பப்பைப் புற்றுநோயைக் கண்டறியலாம்


மே,05,2015. கர்ப்பப்பைப் புற்றுநோயைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும் புதிய சோதனை முறை ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐம்பதும், அதற்கு அதிகமான வயதுடைய 46 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்களிடம் பதினான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, கர்ப்பப்பைப் புற்றுநோயைக் கண்டறியும் தற்போதைய பரிசோதனையைவிட, இரத்தப் பரிசோதனை மூலம் இரண்டு மடங்கு துல்லியமாக இப்புற்றுநோயைக் கண்டறிய முடியும் என்று தெரியவந்திருக்கிறது.

அதேசமயம் கர்ப்பப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் உயிரைப் பாதுகாக்கும் அளவுக்கு, இந்த நோயின் துவக்கத்திலேயே இரத்தப் பரிசோதனைகள் மூலம் துல்லியமாகக் கண்டறிய முடியுமா என்பது குறித்து மேலும் பரிசோதனைகள் நடத்தப்படவேண்டியது அவசியம் என்று, இந்தப் பரிசோதனைமுறையை மேற்கொண்ட இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பப்பைப் புற்றுநோய் காரணமாக ஆண்டுக்கு ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் பெண்கள் உயிரிழப்பதாக மருத்துவப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.