2015-05-02 15:36:00

ஹஸ் அவர்களின் 600ம் ஆண்டு நினைவு நிகழ்வுகளில் திருஅவை


மே,02,2015. “கிறிஸ்துவின் அன்பு நம் இதயங்களை நிரப்புகின்றது மற்றும் இவ்வன்பு, மன்னிப்பதற்கு எப்போதும் நமக்கு உதவுகின்றது” என்ற சொற்களை இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

மேலும், வருகிற ஜூலை 5,6 தேதிகளில், பிராக் நகரில் நடைபெறும் Jan Hus அவர்களின் 600ம் ஆண்டு நினைவு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு, சிறப்புப் பிரதிநிதியாக, பிராக் முன்னாள் பேராயர் கர்தினால் Miloslav Vlk அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1415ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி மரணமடைந்த அருள்பணியாளர் Jan Hus அவர்கள், செக் குடியரசைச் சேர்ந்த மெய்யியலாளர், தொடக்க கால கிறிஸ்தவ சீர்திருத்தவாதி மற்றும் பிராக் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் போதகராகப் பணியாற்றியவர். மார்ட்டின் லூத்தர், கால்வின், Zwingli ஆகிய கிறிஸ்தவ சீர்திருத்தவாதிகளுக்கு முன்னர் வாழ்ந்த Jan Hus அவர்கள், திருஅவையின் முதல் சீர்திருத்தவாதி என கருதப்படுகிறார்.

கத்தோலிக்கக் கோட்பாடுகளுக்கு எதிராகப் பேசுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, 1415ம் ஆண்டில் உயிரோடு எரிக்கப்பட்டார் அருள்பணியாளர் Hus.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.