2015-05-01 15:54:00

வத்திக்கான் சமூகத் தொடர்பு அமைப்புகளில் சீர்திருத்தம்


மே,01,2015. வத்திக்கானின் பல சமூகத் தொடர்பு அமைப்புகளில் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் நோக்கத்தில் ஐந்து பேர் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத் தலைமையகச் சீர்திருத்தத்தில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் ஒன்பது பேர் கொண்ட கர்தினால்கள் குழுவின் பரிந்துரையின் பேரில், திருத்தந்தை உருவாக்கியுள்ள இக்குழுவுக்கு, வத்திக்கான் தொலைக்காட்சி மைய இயக்குனர் பேரருள்திரு Dario Edoardo Viganò அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Avvenire தினத்தாள் பொது இயக்குனர் Paolo Nusiner; வத்திக்கான் இன்டர்னெட் அமைப்புத் தலைவர் பேரருள்திரு Lucio Adrian Ruiz; La Civiltà Cattolica இதழின் இயக்குனர் Antonio Spadaro; திருப்பீட சமூகத் தொடர்பு அவைச் செயலர் பேரருள்திரு Paul Tighe ஆகியோர் இக்குழுவில் உள்ளனர்.

திருப்பீட சமூகத் தொடர்பு அவை, வத்திக்கான் L"Osservatore Romano தினத்தாள், வத்திக்கான் வானொலி, வத்திக்கான் CTV தொலைக்காட்சி மையம், வத்திக்கான் செய்தித் தொடர்பகம், வத்திக்கான் தகவல் பணி, வத்திக்கான் அச்சகம், Fides மறைபோதக செய்தி நிறுவனம், வத்திக்கான் இணையதள மையம், வத்திக்கான் LEV நூல் வெளியீட்டு அலுவலகம், வத்திக்கான் இணையதள செய்தி அமைப்பு என, வத்திக்கானில் ஏறக்குறைய 12 சமூகத் தொடர்பு அமைப்புகள் தனித்தனியே இயங்குகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.