2015-04-23 15:09:00

கடுகு சிறுத்தாலும் – இறைநம்பிக்கைக்குத் கிடைத்த தண்டனை


இந்திய விடுதலைப் போராட்ட வீரரான வ.உ.சி. என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை அவர்கள் சிறையில் இருந்த காலம் அது. அச்சமயத்தில் ஒரு நாள் அவரைச் சிறைக்காவலர் கூப்பிட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் வ.உ.சி. அவர்கள், சிறைக் காவலருக்குப் பதிலே சொல்லவில்லை. சிறைக்காவலர் கூப்பிட்டது வ.உ.சி. அவர்களின் காதில் விழவே இல்லை. ஏனெனில் அந்நேரத்தில் வ.உ.சி. அவர்கள் இறைவழிபாட்டில் ஆழ்ந்திருந்தார். அவரின் முழுக்கவனமும் இறைவனில்  ஒன்றியிருந்தது. பொறுமையிழந்த சிறைக்காவலர், எத்தனை தடவை கூப்பிடறது, நான் கூப்பிட்டது உம் காதில் விழவே இல்லையா என, கடுங்கோபத்துடன் கேட்டார். அதற்கு வ.உ.சி. அவர்கள், மிகவும் அமைதியுடன் பொறுமையாக, நான் உங்களைவிட ஒரு பெரியவரை வழிபட்டுக் கொண்டிருந்தேன், அதனால் உங்கள் குரல் என் காதில் விழவில்லை என்று பதில் சொன்னார். இப்பதிலைக் கேட்ட சிறைக் காவலருக்கு கோபம் கொப்பளித்தது. சிறைக் காவலரின் கடுங்கோபத்தால் கப்பலோட்டிய தமிழரான நம் வ.உ.சி. அவர்கள் செக்கிழுக்க நேர்ந்தது. இறைவன் தன்னோடு, தனக்காக இருக்கிறார் என்பதில் ஒருவர் உறுதியாய் இருக்கும்போது துன்பம் தாங்கிக்கொள்ளக் கூடியதாய் உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.