2015-04-17 15:56:00

திருத்தந்தையின் கியூபா திருப்பயணம் பரிசீலனையில் உள்ளது


ஏப்.17,2015. “மரியே, வியாகுல அன்னையே, கடும் துன்ப நேரங்களில் கடவுளின் விருப்பத்தைப் புரிந்துகொள்வதற்கு எமக்கு உதவும்” என்று, இவ்வெள்ளியன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், வருகிற செப்டம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும்போது கியூபா நாட்டுக்கும் செல்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

இத்திருத்தூதுப் பயணம் குறித்த பேச்சுவார்த்தைகள் கியூபா அரசுடன் தொடக்கநிலையிலேயே உள்ளது என்றும், அதனால் இப்பயணம் குறித்து தற்போது வேறு எதுவும் சொல்ல முடியாது என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்

மேலும், “பூமியைப் பாதுகாத்தல், மனித சமுதாயத்தை மாண்புடன் வைத்திருத்தல்” என்ற தலைப்பில் இம்மாதம் 28ம் தேதி பாப்பிறை அறிவியல் கழகம் நடத்தவுள்ள கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு அறுபது சுற்றுச்சூழல் வல்லுனர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.