2015-04-17 16:18:00

ஆக்ரா தாக்குதலின் உள்நோக்கம் பாதுகாப்பின்மையை உருவாக்குவது


ஏப்.17,2015. இந்தியாவின் ஆக்ராவில் அன்னைமரியா மற்றும் குழந்தை இயேசு திருவுருவங்கள் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டிருப்பது, சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் பாதுகாப்பின்மை உணர்வுகளை உருவாக்கும் உள்நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று இந்திய ஆயர் பேரவை கூறியுள்ளது.

ஆக்ராவின் Pratappura பகுதியில் புனித மரியா ஆலய வளாகத்திலிருந்த அன்னைமரியா மற்றும் குழந்தை இயேசு திருவுருவங்களை நாசவேலைக்காரர்கள் இவ்வியாழன் காலையில் தாக்கி அழித்துள்ளனர்.

இத்தாக்குதல் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்ட இந்திய ஆயர் பேரவையின் உதவி பொதுச் செயலர் அருள்பணி ஜோசப் சின்னய்யன் அவர்கள், இத்திருவுருவங்கள் தாக்கப்பட்டிருக்கும் முறையைப் பார்க்கும்போது, சிறுபான்மை சமூகங்களின் சமய உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது என்று கூறினார்.

குற்றவாளிகளிகளைக் கண்டுபிடிக்கவும், சிறுபான்மை சமூகங்களுக்குப் பாதுகாப்பளிக்கவும் மாநில மற்றும் மத்திய அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார் அருள்பணி சின்னய்யன்

மேலும், இந்தியாவில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெறும் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், பி.ஜே.பி. தலைவர் Amit Shah அவர்களும் நடவடிக்கை எடுக்குமாறு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று விண்ணப்பித்துள்ளது.

பி.ஜே.பி. தலைவர் Amit Shah அவர்கள், மிஜோராம் மாநிலத்தின் Aizawlவுக்குக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றச் சென்றிருந்தவேளை, அம்மாநிலத்தின் 14 கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு இந்த விண்ணப்ப மனுவைச் சமர்ப்பித்துள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.