2015-04-17 16:02:00

அருளாளர் Serra குறித்து தியானிக்கும் நிகழ்வில் திருத்தந்தை


ஏப்.17,2015. உரோம் நகரிலுள்ள வட அமெரிக்க பாப்பிறைக் கல்லூரியில் வருகிற மே 2ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள முத்திப்பேறுபெற்ற Junipero Serra அவர்களின் வாழ்வு குறித்து தியானிக்கும் நிகழ்வில் திருத்தந்தை கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“அருள்பணியாளர் முத்திப்பேறுபெற்ற Junipero Serra: கலிஃபோர்னியாவின் திருத்தூதர் மற்றும் தூயவாழ்வின் சான்று” என்ற தலைப்பில் இந்த ஒருநாள் செபம் நடைபெறும்.

இந்நிகழ்வை இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையும் வட அமெரிக்க பாப்பிறைக் கல்லூரியும் இணைந்து நடத்துகின்றன. இந்நிகழ்வு குறித்த பத்திரிகையாளர் கூட்டம் இம்மாதம் 20ம் தேதி இடம்பெறும்.

வருகிற செப்டம்பரில் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும்போது முத்திப்பேறுபெற்ற Junipero Serra அவர்களை புனிதராக உயர்த்துவதற்கு தான் நினைத்திருப்பதாக திருத்தந்தை ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இஸ்பானியரான பிரான்சிஸ்கன் அருள்பணியாளர் முத்திப்பேறுபெற்ற Junipero Serra அவர்கள், 1700களில் கலிஃபோர்னியாவில் மறைப்பணித் தளங்களை உருவாக்கியவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.