2015-04-15 17:45:00

"திருமணத்திற்கான பேரணி" - அமெரிக்க ஆயர்கள் அழைப்பு


ஏப்.15,2015. ஆண் பெண் உறவே திருமணத்தின் அடிப்படை என்பதை வலியுறுத்தி நடத்தப்படும் "திருமணத்திற்கான பேரணி"யில் (March for Marriage) கத்தோலிக்கர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு உச்ச நீதி மன்றம், ஒரே பாலின உறவைக் குறித்து, ஏப்ரல் 28ம் தேதி, தன் தீர்ப்பை வழங்க உள்ள வேளையில், ஆண் பெண் உறவை வலியுறுத்தி, ஏப்ரல் 25, ஞாயிறன்று, "திருமணத்திற்கான பேரணி" நடைபெறும் என்று அமெரிக்க ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.

வாஷிங்க்டன் நகரில் நடைபெறும் பேரணியில், நேரடியாகக் கலந்துகொள்ள இயலாதவர்கள், தங்கள் செபங்களின் வழியாக, இந்த முயற்சியில் இணைய வேண்டும் என்று பாஸ்டன் பேராயர், கர்தினால் ஷான் ஓ'மாலி அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

குடும்ப உறவுகளையும், குழந்தைகளையும் காப்பாற்றும் நோக்கத்துடன், கத்தோலிக்கத் திருஅவை இந்த முயற்சியை மேற்கொள்கிறது என்று, அமெரிக்க ஆயர்கள் பேரவையின் குடும்ப நலப் பணிக்குழுவின் தலைவர், ஆயர் ரிச்சர்ட் மலோன் அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.