2015-04-15 18:03:00

அனைத்து மதத்தினரும் கொண்டாடிய வங்காளப் புத்தாண்டு நாள்


ஏப்.15,2015. ஏப்ரல் 14, இச்செவ்வாயன்று பங்களாதேஷ் நாட்டில், வங்காளப் புத்தாண்டு கொண்டாட்டங்களை, கிறிஸ்தவர், இஸ்லாமியர், இந்துக்கள் ஆகிய அனைவரும் இணைந்து கொண்டாடினர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

"இருளடைந்த இதயங்களில் பல விளக்குகள்" என்ற மையக் கருத்துடன், இவ்வாண்டு புத்தாண்டு நாள் கொண்டாடப்பட்டதேன்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

மக்கள் வரி செலுத்துவதிலிருந்து அவர்களுக்கு விடுதலை தந்ததையொட்டி, பேரரசர், ஜலாலுதீன் முகம்மது அக்பர் அவர்கள், 16ம் நூற்றாண்டில், உருவாக்கிய இந்த விழா, வங்காளக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே தவிர, எந்த மதத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்படவில்லை என்று, பேராசியர் Nisar Hossain அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

மதங்களுக்கிடையே வெறுப்பை வளர்க்கும் முயற்சிகள் பெருகிவரும் வேளையில், அனைத்து மதத்தினரும் இணைந்து, இந்த நாளை கொண்டாடவேண்டும் என்ற எங்கள் உறுதியும் ஒவ்வோர் ஆண்டும் வளர்ந்து வருகிறது என்று பேராசிரியர் Hossain அவர்கள் எடுத்துரைத்தார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.