2015-04-14 15:36:00

மூன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குத் திருத்தூதுப்பயணம்


ஏப்.14,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகிற ஜூலை 6 முதல் 12 வரை மூன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வார் என்று இலத்தீன் அமெரிக்க ஆயர் ஒருவர் அறிவித்துள்ளார்.

ஜூலை 6ம் தேதி ஈக்குவதோர் நாடு செல்லும் திருத்தந்தை, 7ம் தேதி Quito நகரில் திருப்பலி நிகழ்த்திய பின்னர், El Quinche அன்னைமரியா திருத்தலத்தில் அருள்பணியாளர்கள் மற்றும் குருத்துவ மாணவர்களைச் சந்திப்பார் என்று Cuenca பேராயர் Luis Cabrera Herrera அவர்கள் கூறியதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இருநாள்கள்  ஈக்குவதோர் நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, பொலிவியா மற்றும் பராகுவாய் நாடுகளுக்குச் செல்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலத்தீன் அமெரிக்காவில் பொலிவியா மற்றும் பராகுவாய் நாடுகள் வேகமாக வளர்ந்து வந்தாலும், அக்கண்டத்தின் வறிய நாடுகளாகவே அவை உள்ளன எனவும் கூறப்படுகிறது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.