2015-04-14 15:29:00

டார்க் மேட்டர் பற்றிய புதிய விவரங்கள்


ஏப்.14,2015. இப்புவியின் மிகப் பெரிய புதிர்களில் ஒன்றாக இருந்துவருகின்ற 'டார்க் மேட்டர்' எனப்படும் காண முடியாத பொருள் இருப்பது பற்றியும் அது எங்கு இருக்கிறது என்பது பற்றியும் அறிவியலாளர்கள் புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இப்புவியின் கட்டமைப்புப் பொருளில் பெரும்பங்கு இந்த டார்க் மேட்டர்தான் என்றாலும், இந்தப் பொருளைப் பார்க்க முடியாது, ஆனால் தூரத்திலுள்ள அண்டங்களில் இருந்து வருகின்ற ஒளியில் இந்த டார்க் மேட்டர் ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்துத்தான் அது இருப்பதை அறிய முடிகிறது.

தற்போது ஆண்டிஸ் மலைகளிலுள்ள அதிநவீன தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி பன்னாட்டு அறிவியலாளர்கள் முந்நூறு பேர், டார்க் மேட்டர் பரவியுள்ள வானின் ஒரு பகுதியை படம்பிடித்து விவரம் வரைந்துள்ளனர்.

அண்டங்களோடு டார்க் மேட்டர் பெரும் பெரும் திரிகளாக பரவியிருப்பதையும், அவற்றுக்கிடையில் வெற்றிட இடைவெளி இருப்பதையும் புதிதாக எடுக்கப்பட்டுள்ள படங்கள் காட்டுகின்றன.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.