2015-04-08 17:08:00

கர்தினால் Maung Bo வெளியிட்டுள்ள உயிர்ப்பு விழா செய்தி


ஏப்,08,2015. மதத்தின் பெயரால் வன்முறைகளையும், படுகொலைகளையும் சந்தித்து வரும் மக்களுடனும், பட்டினியால் மரணமடையும் குழந்தைகளுடனும் இந்த உயிர்ப்புக் காலத்தில் நாம் ஒருங்கிணைய வேண்டும் என்று ஆசியக் கர்தினால் ஒருவர் .கூறியுள்ளார்.

மியான்மார் நாட்டின் யாங்கூன் பேராயராக பணியாற்றும் கர்தினால் Charles Maung Bo அவர்கள் வெளியிட்டுள்ள உயிர்ப்பு விழா செய்தியில், மியான்மார் தலத்திருஅவை, உயிர்த்தெழுந்துள்ள திருஅவை என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈவு இரக்கமின்றி கொல்லப்படும் கிறிஸ்தவர்களைக் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள கர்தினால் Maung Bo அவர்கள், இத்தகையக் கொலைகள் தொடரும் வரை, அமைதியை நிலைநாட்டும் நமது பணி தொடரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

மியான்மார் நாடு பல வழிகளிலும் சீரமைக்கப்பட்டு வருவது நம்பிக்கை தருகிறது என்றாலும், இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம் உள்ளதென்று கர்தினால் Maung Bo அவர்கள், தன் செய்தியில் கூறியுள்ளார்.

மியான்மார் நாடு, தனக்குத் தானே அமைத்துக் கொண்ட கல்லறைகளிலிருந்து உயிர் பெற்று எழுவதற்கு, இளைய தலைமுறையினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, குறிப்பாக, கல்வித் திட்டங்களில் அவர்கள் உருவாக்க விழையும் மாற்றங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் கர்தினால் Maung Bo அவர்கள் தன் உயிர்ப்பு விழாச் செய்தியில் விடுத்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.