2015-03-30 16:29:00

காஷ்மீரில் கிறிஸ்தவப்போதகர் ஒருவர் கைது


மார்ச்,30,2015. இஞ்ஞாயிறு வழிபாட்டில் கலந்து கொண்டிருந்தபோது காஷ்மீர் மாநிலத்தின் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார், கிறிஸ்தவப் போதகர் ஒருவர்.

இந்தியக் கிறிஸ்தவர்களுக்கான உலக அவையின் காஷ்மீர் ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்தவப் போதகர் பால் அகஸ்டின், பிரிவினைவாதத்தை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு, இஞ்ஞாயிறன்று கைது செய்யப்பட்டார்.

இவ‌ர் மீதான அக்குற்ற‌ச்சாட்டு பொய்யாக‌ இருப்ப‌தால், இவ‌ரின் உயிருக்கு ஆபத்து  இருப்ப‌தாக‌ போத‌க‌ர் அக‌ஸ்டினின் குடும்ப‌த்தின‌ர் அறிவித்த‌ன‌ர்.

இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய கிறிஸ்தவர்களுக்கான உலக அவையின் தலைவர் Sajan George அவர்கள், பெரும்பான்மையினரின் சட்டம் மேலோங்கியிருக்கும் இடங்களில், சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.