2015-03-27 14:52:00

வாழ்வைப் பிறருக்கு வழங்கும்போது அதன் மதிப்பை உணருகிறோம்


மார்ச்,27,2015. “மனித வாழ்வு விலைமதிப்பில்லாத கொடை, ஆயினும், நாம் அதைப் பிறருக்கு வழங்கும்போது மட்டுமே அதனை உணருகிறோம்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

மேலும், வருகிற ஜூன் 6ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போஸ்னியா-எர்செகொவினா தலைநகருக்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை இவ்வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது.

இத்திருத்தூதுப் பயணத் தயாரிப்புக்களை மேற்பார்வையிடுவதற்கு வத்திக்கான் பிரதிநிதிகள் குழு Sarajevo நகருக்குச் சென்றுள்ளவேளை, “அமைதி உங்களோடு இருப்பதாக” என்ற விருதுவாக்கைக் கொண்ட இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.

ஒலிவ மரக்கிளையைக் கொண்ட ஒரு புறாவும் இதில் உள்ளது.

முன்னாள் யூக்கோஸ்லாவியாவைச் சேர்ந்த போஸ்னியா-எர்செகொவினாவில் 1992ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியிலிருந்து 1995ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி வரை நடந்த சண்டையில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பான்மையினோர் முஸ்லிம்கள். இது, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த முதல் இனப்படுகொலையாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.