2015-03-23 15:16:00

கடுகு சிறுத்தாலும் – சிறந்த உளவியல்


அன்று மாலை வீட்டுக்குள் உற்சாகமாய் நுழைந்தார் அமலன். தான் வாங்கி வந்த  இனிப்புகளை குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு மனைவி அமலாவை கொஞ்சலாக அழைத்தார். “அமலா, எனக்கு 75 ஆயிரம் ரூபாயில் புதிய வேலை கிடைத்திருக்கிறது, அதனால் ஏழைகள் வாழும் இந்தப் பகுதியைவிட்டு, கொஞ்சம் வசதியானவர்கள் வாழும் பகுதிக்கு நாம் குடியேறிவிடலாம்” என்று சொன்னார். அதற்கு அமலா, நாமும் 12 வருஷமா இங்கதானே வாழ்றோம். இப்போ எதுக்கு இடம் மாறணும்?”என்று உற்சாகமற்று கேட்டார். நான் இன்னும் சில நாள்கள கார் வாங்கப்போறேன். நம்ம பிள்ளைகள நல்ல பள்ளிக்கூடத்துக்கு மாத்தணும். அதுக்கெல்லாம் இந்தப் பகுதி சரிப்பட்டு வராது!” என்று சொன்னார் அமலன். “இந்த வீட்லயும் கார் நிறுத்தலாமே. நல்ல பள்ளிக்கூடமும் பக்கத்துலயே இருக்குதே” என்று அமலா சொல்ல, “என்ன புரியாம பேசுறே? நான் சொல்றதுல பெரிய உளவியல் இருக்கு! வசதியானவங்க இருக்கிற இடத்துக்குப் போனா அவங்களைப் பார்த்து நாம வாழ்க்கையில உயரணும்னு தோணும். இன்னும் கஷ்டப்பட்டு முன்னேறணும்னு ஓர் உந்துதல் வரும். ஏதோ வருவாய்க் குறைவாக இருந்தப்போ இங்க இருந்தோம். இனியும் இந்த பாவப்பட்ட மக்களோட சேர்ந்து வாழணுமா?” என்று அமலன் கேட்டார். அதற்கு அமலா, “ஒருவகையில நீங்க சொல்ற உளவியல் சரியா இருக்கலாம். ஆனா, நீங்க சொல்றதையே இந்த பாவப்பட்ட மக்கள் கோணத்துல இருந்து பாருங்க. இவங்க மத்தியில நாம வசதியா மாறுகிறப்போ நம்மளைப் பார்க்கிற இந்த மக்களுக்கும் முன்னேறணும்னு ஆசை வரும்தானே! நான் சொல்றதுலயும் உளவியல் இருக்கத்தானே செய்யுது?” என்று சொன்னார். அமலாவின் உளவியல், அமலனிடம் நல்லதோர் உளவியல் சிந்தனையாக வேலை செய்ய ஆரம்பித்தது. (நன்றி : தி இந்து)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.