2015-03-16 16:13:00

திருத்தந்தை, சான் மரினோ குடியரசின் தலைவர்கள் சந்திப்பு


மார்ச்,16,2015. சான் மரினோ குடியரசின் தலைவர்களான Giancarlo Terenzi, Guerrino Zanotti ஆகிய இருவரையும் இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்துக்கும் சான் மரினோ குடியரசுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், பொது நிறுவனங்ளுக்கும் திருஅவைக்கும் இடையே சமூகப் பணிகளில் காணப்படும் உயிர்த்துடிப்புள்ள ஒத்துழைப்பு போன்றவைகள் திருப்தியாக இருப்பதாக இச்சந்திப்பில் கூறப்பட்டது.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையே உறவுகளின் பொதுச் செயலர் பேராயர் Paul Richard Gallagher ஆகிய இருவரையும் சந்தித்தனர் சான் மரினோ குடியரசின் தலைவர்கள்.

சான் மரினோ Captains Regent என்பவர்கள், அந்நாட்டின் நாடாளுமன்றத்தால் (பெரிய மற்றும் பொது அவையால்) ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் நாட்டின் தலைவர் மற்றும் அரசின் தலைவராகச் செயல்படுவார்கள். புதிய தலைவர்களின் பணியேற்பு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் முதல் நாளில் இடம்பெறுகிறது. இந்நடைமுறை 1243ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருந்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.