2015-03-16 15:44:00

கடுகு சிறுத்தாலும் – வாழ்வின் இறுதிக்கு எந்நேரமும் தயாரா?


முதியவர் ஒருவர் மிகவும் சிரமத்துடன் விறகுக் கட்டைகளைத் தூக்கி வந்தார். மனத்தளவில் அதிகம் சோர்வடைந்து, தனது பிள்ளைகளை நினைத்து சலித்துக் கொண்டார் அவர். இந்த வயதான காலத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி பாரம் சுமப்பது? எமன் வந்து சீக்கிரமாக என்னை எடுத்துக்கொள்ளக் கூடாதா? என்று புலம்பிக்கொண்டே விறகுக் கட்டைகளைக் கீழே இறக்கி வைத்தார் முதியவர். உடனே அவர்முன் எமன் பயங்கர உருவத்தில் தோன்றி, என்னை ஏன் அழைத்தாய்? என்று கேட்டார். எமனின் உருவத்தைக் கண்டு பயந்த முதியவர், இல்லை இல்லை, விறகுக் கட்டைகளை எனது தலையில் தூக்கி வைப்பதற்காகத்தான் கூப்பிட்டேன், வேறு எதுவும் தவறாக நினைத்துவிட வேண்டாம் என்று பதற்றத்துடன் கூறினார். ஆம். துன்பத்தின் மத்தியில் இறப்பு பரவாயில்லை எனத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இறப்பு பெரும்பாலும் வரவேற்கப்படுவதில்லை. அடுத்த கணமே இறப்பதற்குத் தயார் என்னும் நிறைவான சூழலில்தான் வாழ்வு அற்புதமாக அமையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.