2015-03-13 14:35:00

கடுகுச் சிறுத்தாலும்...: தன்னம்பிக்கை தலை காக்கும்


ஓர் ஊரில் அரசர் ஒருவர் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். ஒரு நாள் காலை சூரியோதத்துக்குப் பதில் பிச்சைக்காரர் முகத்தில் விழித்து கோபத்தோடு திரும்பியபோது தலையில் அடிபட்டு இரத்தம் வந்துவிட்டது. கோபமுற்ற அரசர், பிச்சைக்காரரை அரண்மனைக்கு இழுத்துவரச் செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார். பிச்சைக்காரர் கலங்கவில்லை. கலகலவென சிரிக்கத் தொடங்கினார். அரசருக்கு மேலும் கோபம் எழ, மற்றவர்களுக்கோ திகைப்பு.

பிச்சைக்காரர் சொன்னார், ‘என் முகத்தில் நீங்கள் விழித்ததால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே. ஆனால், உங்கள் முகத்தில் நான் முழித்ததால் என் உயிரே போகப் போகிறதே, அதை எண்ணி சிரித்தேன்’ என்று. அரசர் தன் தவற்றை உணர்ந்து தலை குனிந்தார். தண்டனை நீக்கப்பட்டது.

தன்னம்பிக்கையுடன் கலங்காமல் பதிலளித்த பிச்சைக்காரர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.