2015-03-05 14:40:00

கடுகு சிறுத்தாலும் – நம்பிக்கைதான் வாழ்க்கை


மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் கடலில் அடித்த புயலில் இறந்துவிட்டார். அவரது மகனுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ஒருவர், இறந்தவரின் மகன் கடலுக்கு மீன்பிடிக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். அப்போதும் கடலில் புயல் உருவாகிக் கொண்டிருந்தது. ஏம்ப்பா, உனது தந்தை இப்படியொரு புயலில்தான் இறந்தார், மறுபடியும் கடலுக்குள் போகிறாயே என்று கேட்டார் அவர். அதனால் என்ன, எனது தாத்தாகூட கடலில் மீன் பிடித்தபோதுதான் இறந்தார், அதன் பின்னும் எனது தந்தை மீன் பிடிக்கச் செல்லவில்லையா? சரி, உங்கள் தாத்தா எப்படி இறந்தார்? எனக் கேட்டார் மீனவர் மகன். படுக்கையில் தூங்கும்போது அவரது உயிர் பிரிந்தது. உங்களின் அப்பா எப்படி இறந்தார் என்று மீனவர் மகன் மீண்டும் கேட்க, அவரும் அப்படித்தான். படுக்கையில் தூக்கத்தில் இறந்தார் என்றார். ஐயா பெரியவரே, உங்களின் தாத்தாவும் சரி, அப்பாவும் சரி படுக்கையிலே இறந்துவிட்டனர், அதன் பிறகு எப்படி நீங்கள் துணிச்சலாகத் தூங்கப் போகிறீர்கள்? என்று கேள்வியால் மடக்கினார் மீனவர் மகன்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. தினமும் நம்பிக்கையோடு வாழ்வைத் தொடங்குவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.