2015-03-02 16:28:00

தென் சூடானில் அரச ஆதரவு இயக்கத்தால் சிறார்கள் கடத்தப்படல்


மார்ச்,02,2015. தென் சூடான் அரசுடன் இணைந்து செயலாற்றும் தீவிரவாதக்குழு ஒன்றாலேயே அண்மையில் அந்நாட்டுச் சிறார்கள் கடத்தப்பட்டதாக ஐ.நா. நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தென் சூடானில் அரசு ஆதரவு இயக்கத்தால் கடத்தப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கிறது எனவும், முன்னர் நம்பப்பட்டது போல் அது 89 அல்ல என்றும் ஐ.நா.வின் சிறார்களுக்கான அமைப்பு, யுனிசெஃப் கூறியுள்ளது.

இவ்வாறு கடத்தப்பட்டவர்களுள் பலர் பயிற்சி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், 12வயது வரை கொண்ட அச்சிறுவர்கள் ஆயுதம் தாங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்த‌ தீவிரவாதக் குழு எவ்வகையிலும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. 

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.