2015-02-19 15:37:00

மனித வர்த்தகத்தில் சிக்கியோர் வாழ்வில் பாதிப்புக்கள்


பிப்.19,2015 மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோரில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர், விடுதலை பெற்றபின்னரும் தங்கள் வாழ்வில் பாதிப்புக்களை உணர்ந்து வருகின்றனர் என்று அண்மையில்  வெளியான ஓர் ஆய்வு கூறுகிறது.

தெற்காசிய நாடுகளில் மனித வர்த்தகத்தில் சிக்கியவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகள், இப்புதனன்று Lancet Global Health என்ற இதழில் வெளியாயின.

மனித வர்த்தகத்தில் சிக்கி, விடுபட்டவர்கள், ஆசிய நாடுகளில் நிலவும் கலாச்சாரச் சூழல்களால், தங்கள் அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியாமல் துன்புறுவதால், அவர்களில் பலர் இந்த அனுபவங்களின் தாக்கங்களை தொடர்ந்து மனதில் சுமக்கின்றனர் என்றும், இதனால், பலர் தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர் என்றும் இந்த ஆய்வு கூறியுள்ளது.

இந்தப் பிரச்சனைகளில் சிக்கியவர்களுக்குத் தேவையான மனநல வழிகாட்டுதலுக்கு அதிகப் பணம் செலவாவதால், பலர் தங்கள் பிரச்சனைகளுடன் வாழவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆதாரம் : Phnompenhpost / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.