2015-02-19 14:27:00

கடுகு சிறுத்தாலும் – வாழ்வின் எதார்த்தம்


தூண்டில் முள்ளில் குத்தப்பட்டிருந்த புழு துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு மீன், ஆகா, மனிதரின் கருணையே கருணை! எனக்காக இந்த மனிதர் எங்கேயோ இருந்த புழுவைத் தேடிப்பிடித்து தூண்டில் முள்ளிலும் குத்தி, தண்ணீருக்குள் அல்லவா விட்டிருக்கிறார்? என்றது நன்றியுடன். அட முட்டாளே! இதில் என்ன கருணை இருக்கிறது? அவர் உன்னைப் பிடிப்பதற்காக அல்லவா அதை ஏவி விட்டிருக்கின்றார்! என்றது தவளை. நன்றியுணர்வில்லாமல் பேசாதே! எப்போதும் நல்லதையே நினை. நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்; கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும் என்றது மீன். செய் நண்பா, உனக்கு எது நல்லதோ அதையே செய்! என்றது தவளை. அவ்வளவுதான்; துடித்துக் கொண்டிருந்த புழுவை விழுங்கிய மீனும் துடித்துக்கொண்டே அய்யோ ஏமாந்துவிட்டேனே என்றது பரிதாபமாக!. அப்போது மீனிடம் தவளை, நன்றியுணர்வில்லாமல் பேசாதே! கெட்டதை நினைத்தால் கெட்டது நடக்கும்; நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்! என்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.